Sunday, 30 November 2014


எல்லாம் நன்மைக்கே...
---------------------------------

சிபிக்கு தேவையான ஒரு புத்தகத்தை தேடும்போது என் 2002ம் ஆண்டு டயரி கிடைச்சது...
ரொம்ப அழகா எழுதி வச்சிருக்கேன்...எல்லா நிகழ்வுகளையும்..படிச்சுப் பார்த்தா மலைப்பா இருக்கு...
குடும்பம்.. ..- மளிகைசாமான், மெடிக்கல் செலவுகள்..காய்கறிகள் விலை அவ்வளவு குறைச்சலா இருக்கு அப்போ..இன்கம்டாக்ஸ் குவார்ட்டர்ஸ்ல இருந்ததால வாடகை பிரச்னை இல்ல...
கல்யாணம் விசேஷங்கள்.. -- 2002ல் அதிகமான விசேஷங்கள் எங்க வீட்டுல நடந்தது.. எங்க சொந்த வீடு கிரகப்பிரவேசம், என் இரண்டு மச்சினர்களின் கல்யாண நிச்சயதார்த்தம், சுமங்கலிப் பிரார்த்தனை, கல்யாணம், ஒரு ஓர்ப்படியின் வளைகாப்பு சீமந்தம்...இப்படி சிறப்பு நிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி பொங்கி வழிந்தது......எல்லா விசேஷங்களைப் பத்தியும் சின்னதா ஒரு குறிப்பும் எழுதியிருக்கேன்.. எல்லாத்துலயும் எங்கம்மா இருக்காங்க...
ஆபீஸ்... -- அப்பப்பா எத்தனை எத்தனை பிரச்னைகள்..???
ம்ம்ம்...எல்லாத்தையும் சந்திச்சுக்கிட்டுதானே வந்திருக்கேன்... இப்போ ரொம்ப அமைதியா இருக்கேன்னு நினைக்கிறேன்.. கடவுளுக்கு நன்றி..
ஆனா ஒரு விஷயம்...அப்போ எனக்கும் மத்தவங்களுக்கும் எவ்வளவு துன்பங்கள் கொடுத்தாங்களோ...அவங்க எல்லாரும் ரொம்பக் கஷ்டப்பட்டாங்க...சிலர் இப்ப உயிருடனும் இல்லை. பாவமா இருக்கு...எதுக்கு அப்படி கொடுமையா இருந்தாங்கன்னு தெரியல...ஆனா நான் அப்பக்கூட அவங்களை ஒரு வார்த்தை திட்டி எழுதல...எனக்கு கஷ்டத்தை தாங்கும் சக்தி குடு கடவுளேன்னுதான் எழுதியிருக்கேன்..வெரிகுட்.
பசங்க படிப்பு...-- இது எப்பவும்போல ரொம்பக் கவலைப்பட்டு எழுதியிருக்கேன்.. ஆனா இப்போ நினைச்சுப்பார்த்தா, நான் கவலைப்பட்ட அளவுக்கு பசங்க ஒண்ணும் மோசமா போயிடல..நல்லாத்தான் வந்துருக்காங்க...
இதனால் இப்ப நான் தெரிஞ்சுக்கிட்டது என்னான்னா...செல்வி, இப்ப நீ பசங்களைப்பத்தி ரொம்ப கவலைப்படாத...கட்டாயம் அவங்க நல்லா வருவாங்க...

வெரிகுட்...
என்னோட படிப்பு-- 2002ல்தான் லா காலேஜ் பைனல் இயர் எக்ஸாம்..அவ்ளோ பொறுப்பா படிச்சு எக்ஸாம் எழுதியிருக்கேன்..

நல்லவேளை அப்ப பேஸ்புக்ல நான் இல்ல..
நான் பொதுவா அறியற நீதி என்னான்னா....எதுக்காகவும்
நாம ரொம்ப கவலைப்படவேணாம்...எல்லாம் நல்லபடி நடக்கும்...
ALL IS WELL !!!!